ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

அன்பார்ந்த புலம்பெயர் இளைய சமுதாயமே

அன்பார்ந்த புலம்பெயர் இளைய சமுதாயமே எமது இனம் தற்பொழுது என்றும் இல்லாதவாறு இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறது. இந்த வேளையில் நீங்கள் ஒரு சிலர் புலம்பெயர் மக்கள் மத்தியில் அழகுராணி போட்டி நடாத்துவது எமக்கு வேதனை அளிக்கிறது. எம்மினம் சிங்களத்தின் கொடூரத்தில் ஒரு சிறு துளி சுதந்திரம் கூட இல்லாமல் அடைபட்டு வேதனையை சுமக்கும் இந்த தருணத்தில் நாம் அழகு ராணி போட்டி நடாத்துவது எம்மை நாமே முட்டாள் ஆக்கும் செயல் ஆகும். ஆகவே எமதுஇனம் கொஞ்சமாவது சரளமான வாழ்க்கை வாழும்வரையாவது எமது இந்த அழகுராணி போட்டிகளை நிறுத்தி வைக்குமாறு அன்புடம் வேண்டப் படுகிறீர்கள்.இல்லையேல் எம்மை அழிக்கும் சிங்களத்திற்கும் புலம்பெயர் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் . இதை நடாத்தும் நண்பர்கள் சிறிது காலம் இடைநிறுத்தி வைக்கும்படி அன்புடன் வேண்டப் படுகிறீர்கள். இதில் கலந்து கொள்ளும் தமிழ்பெண்களின் பெற்றோரும் இதில் கவனம் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .
 நன்றி
 சுவிஸ் தமிழ்ச்சங்கம்
அன்பார்ந்த புலம்பெயர் இளைய சமுதாயமே

13 சித்திரை அன்று சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற சித்திரைதிருவிழா 2013 நிகழ்வு

313780_512092215515839_2104573344_n.jpg13 சித்திரை அன்று சுவிஸ் நாட்டில் லுசர்ன் மாநகரில் சுவிஸ் தமிழ்சங்கம் மற்றும் இருப்பு இணையம் இணைந்து நடாத்திய சித்திரைதிருவிழா 2013 நிகழ்வு மங்கள விளக்கேற்றல் மற்றும் மாவீரகளுக்கான ஈகைச் சுடர் ஏற்றலுடன் மண்டபம் நிறைந்த மக்களுடன் தமிழ் beats இசைக்குழுவின் இசையில் மாவீரர்கானங்களுடன் திரை இசைப்பாடல்கள் மற்றும் வில்லிப்பாட்டுகள் நடனங்கள் என்று பலவித கலை நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் அவர்களின் சிறப்புரையுடன் சித்திரை திருவிழா 2013 இனிதே இடம்பெற்றது.

திங்கள், 28 ஜனவரி, 2013

யாழ்பாடிகள் 2013

சுவிஸ் லுசர்ன் நகரில் சில வருட இடைவெளியின் பின் சுவிஸ் தமிழ்சங்கம் அஸ்டார் மிடியவோர்க்ஸ் இணைந்து நடாத்தும் சுவிஸ் தழுவிய ரீதியில் யாழ்பாடிகள் 2013 இற்கான மாபெரும் ஜோடிக் குரலுக்கான போட்டி நிகழ்ச்சி பங்கு பெறுங்கள். விண்ணப்ப முடிவு 15.03,2013 


பெயர்:


விலாசம்:



தொ.இ :


பாடல் விபரம் :


அனுப்ப வேண்டிய முகவரி

Siva.Anpalakan

Kleinmatt str-13

6003 Luzern

Phone: 076 593 94 23

email: anpu5000@hotmail.com

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

யோகர் சுவாமிகள்







http://4.bp.blogspot...wami_nallur.jpg



சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964 ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?




ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்

தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.

வியாழன், 12 ஜூலை, 2012

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்

குமரிக்கண்டம்


குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்

விவரங்கள்

படிப்புகள்: 1917











தமிழனுக்குக் குமரிக் கண்டம் தாயகம் என்பது குழப்பமின்றி ஏற்கப்பட வேண்டுமென்றால் முதலில் இனக் கோட்பாடு எனும் போலிக் கோட்பாடு கைவிடப்பட வேண்டும். அக்கோட்பாட்டைப் பெற்றெடுத்த மாக்சு முல்லரே அதைக் கைவிட்டுவிட்டார். (வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், origin And spread of Tamils) இன்றுவரை ஆரியர்களுக்குரியதாக ஒரேயோர் அகழ்வாய்வுக் களம்கூடக் கிடைக்கவில்லை.